விழிப்புணர்வு, சமூக சிந்தனைகளை விரும்பினால் -- மேலே உள்ள படத்தை சுட்டவும்(click)

விழிப்புணர்வு, சமூக சிந்தனைகளை விரும்பினால் -- மேலே உள்ள படத்தை சுட்டவும்(click)

Monday, October 18, 2010

நம் நாட்டில் பல திருநங்கையாரின் வாழ்கை :-

                         வாழ்வில்  சாதித்த  திருநங்கை  ரோஸ்



ஆணாய் பிறந்த எங்களை
தலாட்டி சீராட்டி பாலூட்டி வளர்த்த பெற்றோர்,
எங்கள் உயிரணுக்கள் செய்த மாற்றத்தினால்
எங்களை வெறுத்தனர்.

அனாதையாய் இருந்த எங்களை
இரு பிரிவிலும் ஏற்க மறுத்ததால்,
துன்பத்துடன் உயிர்வாழ,
உடல் உறுப்பினை இழந்தோம் ஒரு பாலனாக.

எங்கு சென்றாலும் பார்கின்றனர் ஒரு பார்வை
வேற்று க்ரஹா எதிரியை போல.

ஆறுதலாய் பேச ஆள் இல்லை,
பழித்து பேச ஊரே திரள்கிறது.

காலை முதல் இரவு வரை
எங்கு சென்றாலும் கேலி கிண்டல்களுடன் வாழ்த்துகின்றனர்,

இத்தனையும் பொருத்து பட்டம் பெற்றும், திறன் இருந்தும்,
வேலை குடுக்க மறுக்கும் சமுதாயதால்,
பலர் படிக்க  முடியாமல் 
வேதனையுடன் உயிர் வாழ
பிச்சை எடுகின்றனர் இன்று.

இருந்தும் காத்திருக்கிறோம்
எங்களை மனிதராக மதிதேற்று      
எங்கள் வாழ்வில்  விடியல் என்னும் ஒன்று
எவர் மூலமாவது  பிறகும் என்று ....