விழிப்புணர்வு, சமூக சிந்தனைகளை விரும்பினால் -- மேலே உள்ள படத்தை சுட்டவும்(click)

விழிப்புணர்வு, சமூக சிந்தனைகளை விரும்பினால் -- மேலே உள்ள படத்தை சுட்டவும்(click)

Sunday, May 30, 2010

தனிமை :

தனிமையை மட்டும் ரசிக தெரிந்த எனக்கு 
அதனை மறக்க செய்தாய்,
கூட்டத்தை விரும்பா எனக்கு 
அதனை பிடிக்க செய்தாய்,
இன்று நீ என்னை விட்டு விலகியதால்..
கூட்டத்தின் நடுவில் இருந்தும் 
தனிமையை உணர வைத்தாய்

பெண்னின் மனது :

 










விண்ணை தொட நினைதேன் ஒரு வயதில்,
தொட்டவன்னை அறிந்து திட்டத்தை கைவிட்டேன் வியந்து.
பெண்னின் மனதை விட தொலைவில்லை
நிலவு என்பதை புரிந்து,
தொடர துடிக்கிறேன் கைவிட்ட பயணத்தை ,
நிலவின் வெளிச்சத்தில் நின்றபடி..

விலகி போனால் :

எங்கிருந்தோ வந்த கார்மேகம் 
கொட்டி தீர்த்தது ,
என் இதயத்தில் காதல் என்னும் மழையை.

மண்வாசனை கூட இன்னும் தனியவில்லை
விலகி சென்றது என்னைவிட்டு.
காரணம் தெரியாமல் காத்திருக்கிறேன் 
அம்மழைகாக நம்பிக்கையுடன்  

காதல் சொல்ல நின்றேன்:

 



பூத்திருந்த பூவின் ஓரம் காத்திருந்தேன் 
அவளை தரிசிக்க தினமும் ...
இன்று வாய்திறந்து பேச வேண்டும் 
என்ற ஆவலுடன் ,
ஆனால் ;
அவள் கண்திறந்து என்னை 
வீழ்த்தும் பார்வையால் ஒரு நொடி பார்க்க,
நிலை குளைந்து நின்றேன் 
அப்பூவை போல ஊமையாக நானும்..



 

கடலை :

வார்த்தைகள் விளையாடிய நேரம்,
மனங்கள் சிரிப்பால் பூத்து குலுங்கிய நேரம்,
நான் என்னை உணர்ந்த நேரம்,
அந்த ஒரு மணி நேரம்
கைபேசியில் அவளுடன்.!!

வாழுந்து கெட்டவன்:

குளிரிலும் பழையது என்று தூக்கி எறிந்தேன்
போர்வையை அன்று ..
அக்குளிரே எனக்கு போர்வையாய் ஆனது இன்று ..
                                          

நட்பு:

கவிதைக்கு சிறப்பு வரிகளானால்?
வரிகளுக்கு வியப்பு வார்தைகலானால் ?
வார்த்தைக்கு நிறைவு எழுத்துகள் ஆனால் ?
நீ எனது கவிதை
உன் சிரிப்பு அதில் சிறப்பு
உன் பேச்சுக்கள் அதில் வியப்பு
உன் நட்பு அதில் நிறைவு ..

Wednesday, May 5, 2010

மயக்கம்

மயங்கினேன் அவள் வார்த்தையில்...

வியந்தேன் சில நாழிகையில்..

உணர துடிக்கிறேன் அவள் வார்த்தைகளில்

உள்ள ஜாலங்களை.

உன்னோடு ஒரு நிமிடம் :

உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்

கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டும் அல்ல

என்னோடு இருக்கும் கவலைகளும் தொலைந்து விடும்.

வெக்கம்

 பெண்களின் சிலுங்கள் சிரிப்புதான் வெக்கம்  என்றால்,
அதனை தூண்டியவனுக்கு சொல்வேன் பல கோடி  நன்றிகள்.

துடிப்பு

கண்களை இழந்தவன் உலகை காண துடிக்கிறான்,

கால்களை இழந்தவன் துள்ளியோட துடிக்கிறான்,

அனைத்தும் உள்ளவன் எந்த துடிப்பும் இன்றி

வெறுப்புகளுடன் துடித்து வாழ்கிறான்.

பயம் :

காலை முதல் மாலை வரை
உன்னோடு பேசுகிறேன் தினமும்,

ஆனாலும் மனம் துடிக்கிறது இரவிலும்
உன் பேச்சை கேட்க.

இது மற்றவர்களிடம் மட்டும் பேசாமல்
என்னோடு மட்டும் பேசவேண்டும் என்ற சுயநலத்தினால் அல்ல,

மற்றவர்களிடம் பேசி என் பேச்சை வெறுத்து விடுவாயோ?
என்ற பயத்தினால்!! தாழ்புனற்சியினால்!!!...

தாய்

இருளில் இருந்தேன் விடியலை தந்தாய்,
சோர்ந்திருந்தேன் ஊகத்தை தந்தாய்,
தொலைந்தோம் என்று எண்ணினேன்
ஒரு வழியை காட்டினாய்.

வலிகளை தந்தேன்
அதனை பொறுத்துக்கொண்டாய்,
கனவுகளை கண்டேன்
அதனை நிஜமாக்க உதவினாய்.

கடைசி வரைக்கும் என்னை யாருக்காகவும்
விட்டு கொடுக்காமல் இருந்தாய்,
கடைசியாக உன் உயிரிலும் மேலாக
என்னை எண்ணினாய்.

இத்தனையும்  எனக்காக  செய்த என் தாயே!

உன்னை எவ்வாறு புகழ்வது சொல்?!!

அதனால் தலை வணங்குகிறேன்
உன் பாதங்களில்...

Tuesday, May 4, 2010

BLE BLE

PLEASE BE HUMBLE

SO THAT U CAN JUMBLE

UR THOUGHTS IN RIGHT WAY

TO LEAD YOUR LIFE SIMPLE.

கிறுக்கன்

தனிமையில் என்னை சிரிக்கவைத்தாய்,
என் துயரங்களை எல்லாம் சிதறடித்தாய்.

கண்திறந்து என்னை கனவு காண செய்தாய்,
இரவெல்லாம் என்னை கண்முழிக்க செய்தாய் ..

காதல் என்னும் சிறைச்சாலையில் என்னை அடைத்து வைத்து

பள்ளி பிரிவு

முதன்முதலில் கண்ணீருடன் சென்றோம்
போக விரும்பாமல்,

இறுதியில் கண்ணீருடன் வந்தோம்
பிரிந்து போக மனமில்லாமல்.

முதல் கண்ணீர் புது இடம் என்ற பயத்தினால்,

இறுதியில் பழகிய நண்பர்களை மீண்டும் பார்ப்போமா
என்ற க்கத்தினால்.

இத்தகைய துயரத்திலும் விடைக்கொடுதோம் நம் பள்ளிக்கு

ஏக்கம்:

வானில் இருந்து போழிவதோ சாரல் மழை,
என் நெஞ்சுக்குள் போழிவதோ காதல் மழை.

வான்மழை போழிவதோ மேகத்தால்,
என்னுள் போழிவதோ அவளை காணாத ஏக்கத்தால்...

காதல்

காதல் ஒருவனுக்குள் வந்துவிட்டால்
கள்நெஞ்சகாரன் கூட கண்ணதாசன் தான்..