இருளில் இருந்தேன் விடியலை தந்தாய்,
சோர்ந்திருந்தேன் ஊகத்தை தந்தாய்,
தொலைந்தோம் என்று எண்ணினேன்
ஒரு வழியை காட்டினாய்.
வலிகளை தந்தேன்
அதனை பொறுத்துக்கொண்டாய்,
கனவுகளை கண்டேன்
அதனை நிஜமாக்க உதவினாய்.
கடைசி வரைக்கும் என்னை யாருக்காகவும்
விட்டு கொடுக்காமல் இருந்தாய்,
கடைசியாக உன் உயிரிலும் மேலாக
என்னை எண்ணினாய்.
இத்தனையும் எனக்காக செய்த என் தாயே!
உன்னை எவ்வாறு புகழ்வது சொல்?!!
அதனால் தலை வணங்குகிறேன்
உன் பாதங்களில்...
No comments:
Post a Comment